பஞ்சாபில் பாகிஸ்தானிய கடத்தல்காரர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு.. 47 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

0 2186

பஞ்சாபில் பாகிஸ்தானிய கடத்தல்காரர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடித்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களிடம் இருந்து 47 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

குருதாஸ்பூர் மாவட்டத்தில் சந்து வடாலா என்னுமிடத்தில் பாகிஸ்தான் எல்லையில் அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது கடத்தல்காரர்களும் துப்பாக்கியால் சுட்டதில் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்துக் கடத்தல்காரர்கள் பொருட்களைப் போட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கே தப்பியோடிவிட்டனர்.

47 கிலோ ஹெராயின், 7 கஞ்சா பொட்டலங்கள், 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments