கொல்லம் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
கேரளாவில், கொல்லம் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள், ஆலுவா ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்றிரவு 10.30 மணிக்கு ஆலுவா ரயில்நிலையத்தின் 3வது நடைமேடைக்குள் நுழையும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனால் பல ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு குருவாயூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கண்ணூர் எக்ஸ்பிரஸ் உட்பட 11 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இது குறித்து பேசிய திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர், சரிபார்ப்பு பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் ஒரு பாதை வழியாக சில ரயில்கள் இயக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments