நடிகை ஸ்வேதா திவாரி கடவுள் தொடர்பான சர்ச்சை பேச்சு.! நடவடிக்கை எடுக்க மாநில உள்துறை அமைச்சர் உத்தரவு

0 5631

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரி கடவுள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்து 24 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

நடிகை ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த தொடர் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘கடவுள் தமது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்’என கூறினார். அவர் பேசிய இந்த வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments