"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
லித்வேனியாவில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு டெலிவரி செய்யப்பட்ட தபால்
டிஜிட்டல் யுகத்தில் தபால்கள் அரிதாகி விட்ட காலத்தில் லித்வேனியாவில் 52 ஆண்டுகளுக்கு முன்பு தபால்பெட்டியில் போடப்பட்ட கடிதங்கள் இப்போது உரியவர்களுக்கு சேர்க்கப்பட்டு வருகின்றன.
போலந்தில் இருந்து ஒரு பேனா நட்புத் தோழி 12 வயது சிறுமிக்கு எழுதிய கடிதம் 60 வயதைக் கடந்த அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.மார்ச் 1970 தேதியிட்ட அந்தக் கடிதத்தில் ஈவா என்ற சிறுமி தனது தோழியின் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை என்றும் கடும் குளிரில் பல மைல் நடந்து வர வேண்டியிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இத்தனை ஆண்டுகள் கழித்து தமக்கு இக்கடிதம் கிடைத்தபோது அதை நம்பவில்லை என்கிறார் குளோனவஸ்கா என்ற அந்தப் பெண்மணி. முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல், அந்நாட்டில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கடிதங்கள் தற்போது டெலிவரி செய்யப்படுகின்றன.
Comments