விண்வெளியில் அறியப்படாத பொருளில் இருந்து வெளியாகும் ரேடியோ சிக்னல்.. நட்சத்திரத்தில் இருந்து வெளியாகலாம் என விஞ்ஞானிகள் கருத்து
விண்வெளியில் அறியப்படாத பொருளில் இருந்து 18 நிமிடங்களுக்கு ஒருமுறை ரேடியோ சிக்னல் வெளிப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் சுழலும் பொருள் ஒன்று கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பொருள் ஒரு மணி நேரத்திற்கு 3 முறை கதிர்வீச்சை வெளிப்படுத்தியது. அந்த நேரங்களில் அதிலிருந்து வெளியாகும் ரேடியோ சிக்னல் மிகவும் தெளிவாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரேடியோ சிக்னல் எரிந்துபோன நட்சத்திரத்தில் இருந்து வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Comments