போதை மாத்திரைகளை கடத்த முயன்ற 27 பேர் ராணுவத்தினரால் சுட்டுக்கொலை
சிரியாவில் இருந்து ஜோர்டான் நாட்டிற்குள் போதை மாத்திரைகளை கடத்த முயன்ற 27 பேர் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு போரால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சிரியாவில், பெரியளவில் போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தபடுகிறது.
ஜோர்டான் எல்லை அருகே பனிப்புயல் வீசுவதை சாதகமாக்கி கொண்டு லாரிகள் மூலம் போதை மாத்திரைகளை கடத்த முயன்ற கும்பல் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் சிரியாவிற்கு தப்பி ஓடினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஜோர்டான் குற்றம் சாட்டியுள்ளது.
Comments