வாடிக்கையாளர்களின் பங்குப்பத்திரங்களை அடகு வைத்து ரூ.2000 கோடி மோசடி..! கார்வி நிறுவனத் தலைவர் கைது
வாடிக்கையாளர்களின் பங்குப் பத்திரங்களை அடகு வைத்து இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கி மோசடி செய்த வழக்கில் கார்வி குழுமத் தலைவர் பார்த்தசாரதி, தலைமை நிதி அதிகாரி ஹரி கிருஷ்ணா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
கார்வி பங்குத் தரகு நிறுவனத்தின் மீது ஐதராபாத் மத்தியக் குற்றப் பிரிவில் எச்டிஎப்சி வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரித்தது.
வாடிக்கையாளர்கள் கொடுத்து வைத்திருந்த பங்குப் பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்துக் கடன் பெற்றும், போலி நிதி நிறுவனங்களில் அடகு வைத்துக் கடன்பெற்றது போலக் காட்டி உரிமை மாற்றம் செய்தும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
Comments