வடகொரியா-சீனா இடையே மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து; 2 ஆண்டுகளுக்குப் பிறகு தளர்வு
கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா மெல்ல தளர்த்த தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக சீனாவை ஒட்டியுள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வடகொரியா - சீனா இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்காத நாடு என கூறிவரும் அதிபர் கிம் ஜோன்ங் உன் தலைமையிலான வடகொரிய அரசு, தடுப்பூசி தொடர்பாக இதுவரை எந்த நாட்டின் உதவியையும் கோரவில்லை.
Comments