இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து - தமிழக அரசு

0 7353

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,  வரும் 28ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும்  கூறப்பட்டுள்ளது.

மேலும்,பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments