ஒரே மாதத்தில் 6-வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

0 2376

வடகொரியா உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஹேம்ஹங் நகர் அருகே இருந்து 2 குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரிய ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை ஆகும். இந்நிலையில் இது தொடர்பாக சீனாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாவோ லிஜியன், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments