எல்லையில் மாயமான சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைத்தது சீனா..!
எல்லையில் மாயமான அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனை, சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது.
சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அருணாச்சலபிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன், கடந்த 19-ந் தேதி மாயமானார்.
முதலில் சீன ராணுவத்தால் சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்திய ராணுவம், சீன ராணுவத்தை தொடர்புகொண்டு சிறுவனை ஒப்படைக்குமாறு கூறியது.
அப்போது, சிறுவன் சட்டவிரோதமாக தங்கள் பகுதிக்குள் வந்துவிட்டதாக கூறிய சீனா, சிறுவன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவான் எனக் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சிறுவனை சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் நடந்து வருவதாகவும், விரைவில் சிறுவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார் என மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
Comments