டோங்கா தீவுகளின் பங்கய் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.2 ஆக பதிவு..!
டோங்கா தீவுகளில் உள்ள Pangai பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Pangai - யில் இருந்து 219 கிலோமீட்டர் மேற்கு - வடமேற்கு பகுதியில் 6 புள்ளி 2 ரிக்டராக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் 14 புள்ளி 4 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
Comments