இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியில் பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு
இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியில் பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பிற இந்திய மொழிகளின் அறிவை மாணவர்களுக்கு மறுப்பது சரியானதல்ல என்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மேற்கோள்காட்டி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்கள் பெரும் பொறுப்புகளில் இடம்பெறுவதிலும் குறைகள் ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவிற்கு ஆளுநர் இசைவு அளிக்க வேண்டும் என்றும், ஒப்புதல் அளிப்பதுடன் விரைவில் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Comments