தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆலோசனைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளை நடத்த பள்ளிகல்வித்துறை தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுழற்சி முறை இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகளை திறக்க அனுமதி கோரியுள்ளதாக பேசிய அமைச்சர், பிப்ரவரி 1 தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி கிடைத்தால் வழக்கம் போல மே மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றார்.
Comments