நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை - பொது சுகாதாரத்துறை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இந்த தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, 1லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் அரசு பணியாளர்கள், காவல் துறையினர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என தேர்தல் பணியில் ஈடுபடும் நபர்கள் யாருக்கும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாமில்லை எனவும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடையாதவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படாது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments