தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது புகார்

0 6207

சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது  ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சிலர் எழுந்து நிற்காமல் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ராஜேஷ் என்பவர் அளித்த புகாரில், தமிழக அரசு சென்ற மாதம் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியிட்ட  ஆணைப்படி, தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், குடியரசு தினவிழாவில் அடையாளம் தெரியாத சில ரிசர்வ் வங்கி ஊழியர்கள் இந்த ஆணைக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments