பீகாரில் ரயில்வே தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் ரயிலுக்கு தீ வைப்பு
பீகாரில் ரயிலுக்குத் தீ வைத்த சம்பவத்தையடுத்து வேலை வாய்ப்புக்கான 2 ம் கட்ட ரயில்வே தேர்வுகளை நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. தேர்வாளர்களின் சந்தேகங்களைத் தீர்க்க கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழில் நுட்பம் சாராத வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பீகார் மாநிலம் கயா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு மாணவர்கள் தீவைத்து எரித்தனர். இதில் ரயிலின் பல பெட்டிகள் தீக்கிரையாகி கருகின.
மாணவர்கள் அமைதி காக்கும்படி பீகார் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ரயில்வே சொத்துகள் உங்களுக்குரியவை என்றும் இதற்கு தீ வைத்து சேதம் செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரயில்வே அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
Comments