தனியார் வங்கியை ஏமாற்றி ரூ.51.88 லட்சம் பணமோசடி செய்த நபர் கைது

0 5177

திருநெல்வேலியில், தனியார் வங்கியை ஏமாற்றி 51 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்குறுங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், வள்ளியூரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் மகளிர் சுயதொழில் தொடங்க தவணை முறையில் கடன் வழங்குவதாகக் கூறி, தான் பணிபுரிந்து வந்த Quess Corporate Ltd நிறுவனத்தின் பெயரில் பணத்தை பெற்றுள்ளார்.

சம்மந்தப்பட்ட நபர்களுக்கு பணத்தை கொடுக்காமல் கடன் கொடுத்தது போல் வங்கி ஆவணங்களில் செலவு காட்டி ஏமாற்றியதாக நிறுவனத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த கார்த்திக்ராஜா-வை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments