அமெரிக்கா அருகே படகு கவிழ்ந்து 39 பேர் மாயம்
அமெரிக்காவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 39 பேர் மாயமாகி உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பஹாமஸ் அருகே உள்ள பிமினி என்ற இடத்தில் இருந்து படகு ஒன்று அமெரிக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக அந்தப் படகு புளோரிடா அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் மேலும் 39 பேரைக் காணவில்லை. இதையடுத்து அமெரிக்க கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்களை மனிதக் கடத்தல்காரர்கள் படகில் அழைத்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
Comments