இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட அனைவருக்குமே மூன்றாவது டோஸ் பூஸ்டர் ஊசி செலுத்தப்படாது என்று தகவல்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட அனைவருக்குமே மூன்றாவது டோஸ் பூஸ்டர் ஊசி செலுத்தப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கொள்கை முடிவை வகுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோய் உடைய நலிந்த உடலுடையவர்களுக்கும். சுகாதாரத் துறையினருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது.
ஆயினும் எல்லோருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அவசியம் இல்லை என்று நிபுணர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். பூஸ்டர் செலுத்திய நாடுகளில் ஒமைக்கரான் பரவலுக்கு எதிராக எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் கண்மூடித்தனமாக மற்ற நாடுகளைப் பின்பற்றக் கூடாது என்றும் நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப வல்லுனர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசிகளை உள்நாட்டின் தேவை, அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் பயன்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
Comments