ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 5060

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30 ஆயிரமாக இருந்து வருகிறது. 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், 31-ந்தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடு நிறைவடைவதால், ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வரும் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து பரிந்துரைத்திருப்பதாக அத்துறையின் அமைச்சர் நேற்று கூறியிருப்பதால் அது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments