லால் சவுக்கில் 30 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றப்பட்டது இந்திய தேசியக் கொடி
காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக் மணிக்கூண்டில் முப்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய தேசியக் கொடியேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் லால் சவுக் மணிக் கூண்டில் 1992ஆம் ஆண்டு ராணுவத்தினரின் துணையுடன் அப்போதைய பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோசி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதன் பின்னர் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல், 144 தடையுத்தரவு போன்ற காரணங்களால் அங்குத் தேசியக் கொடி ஏற்றப்படுவது இல்லை. மீறித் தேசியக் கொடியேற்றச் செல்பவர்கள் கைது செய்யப்படும் சூழல் இருந்தது.
முப்பது ஆண்டுகளுக்குப் பின், குடியரசு நாளான இன்று சஜித் யூசுப் ஷா, சகில் பசீர் பட் ஆகிய இருவரால் அங்குத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்குக் காஷ்மீர்க் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நின்றனர்.
Comments