தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை : ஆர்.பி.ஐ அதிகாரிகள் வாக்குவாதம்

0 4429
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை: ஆர்.பி.ஐ அதிகாரிகள் வாக்குவாதம்

சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட நிலையில், அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் வாக்குவாதம் செய்தனர்.

குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஏன் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர்.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறவே இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்கு பிறகு உயரதிகாரிகள் தலையிட்டு இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என கூறினர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது எனவும், உரிய வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments