தேசியக் கொடியேற்றி வணங்கிய ஆளுநர்கள், முதலமைச்சர்கள்..!
குடியரசு நாளையொட்டி டெல்லியில் மத்திய அமைச்சர்களும், பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் தமது இல்லங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தேசியக் கொடியேற்றி வணங்கினார். மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் விழாவில் கலந்துகொண்டார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாட்னாவில் தனது இல்லத்தில் தேசியக் கொடியேற்றினார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் திருவனந்தபுரத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
புவனேசுவரத்தில் ஒடிசா ஆளுநர் கணேசி லால், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
கொல்கத்தாவில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியேற்றினார். இந்த விழாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்தூரில் தேசியக் கொடியேற்றினார்.
Comments