முப்படை வீரர்களின் அணிவகுப்பு: போர்த்தளவாடங்களின் அணிவகுப்பு
73ஆவது குடியரசு நாளையொட்டி டெல்லி ராஜபாதையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் படைவலிமையைப் பறைசாற்றும் போர்த்தளவாடங்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற குடியரசு நாள் விழாவில் விமானப்படையின் எம்ஐ வகையைச் சேர்ந்த நான்கு ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியுடன் வானில் பறந்தன.
செஞ்சுரியன், அர்ஜுன் வகையைச் சேர்ந்த பீரங்கிகளும், ஹவிட்சர் வகை பீரங்கிகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.
சீக்கிய ரெஜிமென்ட் படைப்பிரிவினர், ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
கடற்படையின் வலிமையையும், உள்நாட்டிலேயே போர்த்தளவாடங்கள் தயாரிக்கப்படுவதைக் காட்டும் வகையிலும், கடற்படையின் அலங்கார ஊர்தி அணிவகுத்துச் சென்றது.
விமானப்படையின் அலங்கார ஊர்தியில் மிக் 21, இலகு வகை ஹெலிகாப்டர்கள், ரேடார், ரபேல் போர் விமானம் ஆகின இடம்பெற்றன.
எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள ஒட்டகப் படைப் பிரிவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது.
Comments