குடியரசு தினத்தை ஒட்டி 15 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பாதுகாப்பு படை வீரர்கள்

0 4232

நம் நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தை ஒட்டி, லடாக் எல்லையில் இந்திய - திபெத் எல்லை காவல் படையினர் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடினர்.

இதே போல, இமாச்சல பிரதேசத்தில் 16 ஆயிரம் அடி உயரத்திலும், உத்தரகாண்டில் உள்ள குமாவோன் பகுதியில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திலும் இந்திய - திபெத் எல்லைக் காவல் படையினர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, தேசிய கீதம் பாடி குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.

இதற்கிடையில், குடியரசு தினத்தை நினைவு கூரும் வகையில் இப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் வீரர் ஒருவர் பாடல் பாட, இந்திய-சீனா எல்லையின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையிலும் மக்களைக் காக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments