தலைநகரில் குடியரசு தின விழா கோலாகலம்.! தேசிய கொடியேற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை

0 4531

73ஆவது குடியரசு நாளையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்து வணங்கினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், விருதுகளையும் வழங்கினார். 

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் விடுதலை பெற்ற இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு அந்தச் சட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

அன்று முதல் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 73ஆவது குடியரசு நாள் விழாவில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மாளிகையில் இருந்து புறப்பட்டார். குதிரை மீதமர்ந்த வீரர்களின் அணிவகுப்புடன் இசைமுழக்கத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசியக் கொடியேற்றி வைத்து வணங்கினார். அப்போது 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

 ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் துணிச்சலுடன் செயல்பட்டு மூன்று தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்ற பின் வீரமரணமெய்திய காவல் உதவி ஆய்வாளர் பாபுராமுக்கு அசோகச் சக்கரா விருதை அவர் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments