ஹங்கேரியில் நவீன அரங்கம் - இயற்கை சூழலில் இசையை ரசிக்கலாம்
ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் விதமாக அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராட்சத காளானை போல் காட்சியளிக்கும் இந்த அரங்கம் தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளிக்கதிர்கள் நுழைவதற்காக அரங்கின் மேற்கூரையில் 100 ராட்சத துளைகள் இடப்பட்டுள்ளன. இரைச்சலின்றி இசை மெட்டுகளை ரசிப்பதற்கு ஏற்றவாறு இங்குள்ள கண்ணாடி சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
40 அடி உயரம் கொண்ட இந்த 94 கண்ணாடி சுவர்களை இசையின் இயல்புகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது.
Comments