மகாராஷ்ட்ராவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு
மகாராஷ்ட்ராவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று 33 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு 86 ஆக அதிகரித்துள்ளது. மும்பை, புனே போன்ற பெரிய நகரங்களிலும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்து வருகிறது.
மூன்றாவது அலை பின்வாங்கத் தொடங்கியிருக்கிறது என்றும், பாதிப்பு எண்ணிக்கை அடுத்த மாதம் குறையும் என்றும் மாநில நோய்க் கண்காணிப்பு நிபுணர் டாக்டர் பிரதீப் அவாதே தெரிவித்துள்ளார்.
Comments