மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

0 4239
மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண் விருது

மறைந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு  பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை, சமூகப்பணி, அறிவியல், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டில் பத்ம விபூஷண் விருதிற்கு 4 பேரும், பத்ம பூஷண் விருதிற்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதிற்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் உத்தர பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், சமூக பணிகளில் ஈடுபட்ட மறைந்த ராதேஷ்யாம் கெம்கா ஆகியோருக்கு மறைவுக்கு பின் பத்மவிபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இந்துஸ்தானி இசை பாடகியான பிரபா ஆத்ரேவிற்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லாவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதல்லா, சீரம் நிறுவன மேலாண்மை இயக்குநர் சைரஸ் பூனேவாலாவிற்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாராலிம்பிக் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பழம் பெரும் தமிழ் நடிகை சவுகார் ஜானகி, சமூக ஆர்வலர் தமோதரன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழர்கள் 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments