திருப்பூரில் 3 பேரை தாக்கிய சிறுத்தை சோளக்காட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக வனத்துறையினர் தகவல்
திருப்பூர் மாவட்டம் பாப்பங்குளத்தில் வன அலுவலர் உட்பட 3 பேரை தாக்கிய சிறுத்தை சோளக்காட்டிற்குள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த சிறுத்தை வனத்துறையின் கண்காணிப்பை மீறி வெளியேறிவிட்டதாக திருப்பூர் மாவட்ட துணை வனப் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை வனத்துறையினர் கிரேன்களில் ஏறி மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முயன்றனர். அப்போது, சிறுத்தை சோளக்காட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.
இந்த நிலையில், பாப்பாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினர் 80 பேர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட துணை வன பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
Comments