புதிய படிப்புகள், ஆராய்ச்சிகள் தேவை.. உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக மாற வேண்டும்.. முதலமைச்சர் பேச்சு

0 2898
வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகளும், ஆய்வுகளும் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவதோடு நின்றுவிடாமல் ஆராய்ச்சி நிறுவனமாக மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் இருக்கும் புதுவிதமான படிப்புகளும், ஆய்வுகளும் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவதோடு நின்றுவிடாமல் ஆராய்ச்சி நிறுவனமாக மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பேரிடர் மேலாண்மை, விவசாயம், கட்டுமான கண்காணிப்பு, வரி திட்டமிடல், சுகாதாரம், வானவியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகள் போன்ற அரசு துறைகளின் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உருவக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், ஆளில்லா வான்வழி வாகன செயல்பாடுகளை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 7கோடியே 25லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி மையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நாளுக்கு நாள் மின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சூரிய சக்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்குவதோடு நின்றுவிடாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புதிய கண்டுபிடிப்புகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், தமிழகத்தில் தான் ஆற்றல் மிக்க இளைஞர் சக்தி இருக்கிறது எனவும், தமிழக இளைஞர்கள் தான் உலக அளவில் மிக முக்கிய பொறுப்புகளை அலங்கரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு, data science, cyber security, digital marketing, game theory உள்ளிட்ட புதுவிதமாக படிப்புகளை மாணவர்கள் கற்க உயர்கல்வித்துறை ஊக்குவிக்க வேண்டும் எனவும், இது தொடர்பான ஆலோசனைகளை உயர்கல்வித்துறை நிபுணர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments