கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்.!
டோங்காவில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக எழுந்த சுனாமியால் பெரு நாட்டின் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனை அகற்ற உதவியாக அந்நாட்டு மக்கள் பலர் தலைமுடியை தானம் செய்து வருகின்றனர்.
எரிமலை வெடிப்பால் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கசிவு ஏற்பட்டது. தலைமுடியை பயன்படுத்தி நீருக்கு மேல் மிதக்கும் எண்ணெயை உறிஞ்சும் பிரத்தியேக பொருளை ஒரு நிறுவனம் தயாரிக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் ஆன உதவியை செய்வதாக தலைமுடியை தானம் கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
Comments