பெரம்பலூரில் போலீசாரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சுப்பிரமணி என்பவரது வீட்டின் கூரையில் பாய்ந்த துப்பாக்கிகுண்டு.!

0 3036

பெரம்பலூர் அருகே துப்பாக்கிச்சூடு பயிற்சியின்போது வீடு ஒன்றின் மேற்கூரையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் என்ற கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டின் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்திருக்கிறது. அந்த கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில், போலீசாரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சி தளம் உள்ளது.

இந்நிலையில், அங்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் பயிற்சியின் போது தவறுதலாக மேற்கூரையில் குண்டு துளைத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிக் குண்டு எந்த ரக துப்பாக்கியை சேர்ந்தது என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாக பெரம்பலூர் எஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments