ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய ஆணைக்கு விமான தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

0 8948
ஏர் இந்தியாவின் புதிய விதியால் விமான பணியாளர்கள் அதிருப்தி

விமான பணியாளர்கள் விமானத்துக்குள் நுழையும் முன்பாக, விமான நிலையத்திலேயே அவர்களது உடல் வடிவத்தை அளவிடும் உடல் நிறை குறியீடுட்டை சரிபார்த்த பிறகு அனுப்பப்பட வேண்டும் என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆணைக்கு விமான தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

BMI என்று அழைக்கப்படும் body mass index மூலம் உடல் வடிவம் கணக்கிடப்படும் நிலையில், அதிக BMI குறியீடு கொண்டவர்களின் உடலில் அதிக கொழுப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த சோதனை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள விமான தொழிற்சங்கங்கள், ஏர் இந்தியாவின் மருத்துவமனையின் மருத்துவர் நேரடியாக செய்ய வேண்டும் எனவும், விமானத்திற்குள் ஏறுவதற்கு முன்னதாக செய்வது மனிதத் தன்மையற்ற செயல் எனவும் தெரிவித்துள்ளன.

வரும் 27 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏற்று நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY