பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 3187
பணவீக்கம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசைபாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பணவீக்கம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசைபாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முறையாக பதிலளிக்காத ஜோ பைடன் மைக் ஆனில் இருக்கும் போதே பத்திரிகையாளர் மீது கோபத்தை வெளிக்காட்டியதோடு, அவரை வசைபாடினார்.

இதனிடையே, பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதால், அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் ஜோ பைடன் பேசியதாகவும், பத்திரிகையாளரை தனிப்பட்ட முறையில் திட்டவில்லை என வெள்ளை மாளிகைத் தரப்பில், விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments