தமிழகம் முழுவதும் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடிக்க குடிசை மாற்று வாரியம் உத்தரவு
தமிழகம் முழுவதும் சேதமடைந்த நிலையில் இருக்கும் 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
திருவொற்றியூரில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம் ஆயின. இதனையடுத்து, தமிழகம் முழுவதுமுள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து குடிசை மாற்று வாரியம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 22,271 குடியிருப்புகளில், அதன் தரம், ஸ்திரத்தன்மை, உறுதி ஆகியவை குறித்து அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது.
Comments