தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு வலைவீச்சு

0 2481

தஞ்சாவூர் வடக்கு வீதியில் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து எடுத்து அருகில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடக்கு வீதியில் வைக்கப்பட்டு இருந்த 2 அடி உயர எம்.ஜி.ஆர். சிலையை இரவோடு இரவாக மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள டீக் கடை உரிமையாளர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அதே பகுதியில் சிலை கீழே கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சிலையை பெயர்த்தெடுத்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments