தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் ரூ.69.14 கோடி சொத்துக்கள் முடக்கம்

0 3148

சென்னையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 69 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 D R பவுண்டேசன் மற்றும் எஸ்டேட் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தின் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த புகாரில் தன்ராஜ் கோச்சார் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆராய்ந்ததில், பல்வேறு முறைகேடுகள், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். தன்ரஜ் கோச்சார் மற்றும் குடும்பத்தினரின் பல்வேறு முதலீடுகள் உள்பட 69 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments