திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி, கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் தேவை என்று தேவஸ்தானம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று 3-வது அலை பரவும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 48 மணிநேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்ததற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வரும் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொண்டு வராதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments