கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் - யுனிசெப் அமைப்பு

0 2963

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் ஏறத்தாழ 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகள் மூடலால் பல நாடுகளில் லட்சக்கணக்கான குழந்தைகள் அடிப்படை திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும், அதனால் மன இறுக்கம், போதிய ஊட்டச்சத்து குறைவின்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை குழந்தைகள் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்குள்ளான குழந்தைகளில் 70 சதவீதம் பேர் சாதாரண வாசகங்களை கூட வாசிக்கக் கூடிய திறனற்று உள்ளதாகவும், பள்ளிகள் இடைநிற்றல் அளவு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகளை திறக்கக் கோரி உலக நாடுகளுக்கு யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments