அயோத்தி ராமர் கோவில் 3-வது கட்ட கட்டுமான பணிகள் தொடக்கம்
அயோத்தியில் ராமர் கோவிலின் 3-வது கட்ட கட்டுமான பணிகள் ஆரம்பமாகி உள்ளது. கோவிலின் அஸ்திவாரத்தில் கிரானைட் கற்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த சேஸ்திர அறக்கட்டளை சார்பாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. 2025-ஆம் ஆண்டுக்குள் கோவில் கட்டுமான பணிகள் முழுவதையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதத்திற்குள் அஸ்வாதிரத்தில் கிரானைட் கற்களை பதிக்கும் பணிகள் நிறைவடையும் என அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments