திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்

0 3166

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகள் தவிர்த்து பொது, சமூக மற்றும் கலாசார கூட்டங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாகவும்,  திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தையும் தற்காலிகமாக மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

பத்து மற்றும் 12ஆம் வகுப்பு இறுதியாண்டு கல்லூரி மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் இரு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன்  முழு ஊரடங்கை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments