எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

0 2674
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 534 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 534 மாணவர்களுக்கு இடங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 514 மதிப்பெண்களுடன் மாணவர் சிவா முதலிடமும், மாணவர் பிரகாஷ்ராஜ் 2ஆம் இடமும், மாணவன் சந்தானம் 3ஆம் இடமும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாநில மற்றும் சுயநிதி கல்லூரி இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.பி.எஸ்.,மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என்றார். நடப்பாண்டில் 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு 5 ஆயிரத்து 175 இடங்களும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளுக்கு 200 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments