பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு

0 4678
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.

பாஜக 65 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலிதளம் சன்யுக்த் பிரிவு 15 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது பேசிய ஜே.பி.நட்டா, நாட்டின் பாதுகாப்பிலும், உணவுப் பாதுகாப்பிலும் பஞ்சாப் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்தார். பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20ஆம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments