நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை ; நீதிபதிகள்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தேர்தலை தள்ளிவைக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், வேண்டும் என்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றம் செல்லலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் செல்ல தாங்கள் எப்படி வற்புறுத்த முடியும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல்லை தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் இந்த வழக்கில் தங்கள் கைகள் கட்டப்படுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் சட்டமன்ற தேர்தலே நடத்தப்படும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பது வியப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments