பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது
கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டினர்.
இதனை அங்கிருந்த ஊழியர்கள் கண்டித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று அதிகாலை போலீசார் பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments