செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தே எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம்
செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்தே எழுதலாம் என்றும் ஒரு மணி நேர தேர்வுக்கு பதில் 3 மணி நேர தேர்வாக நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
தேர்வுகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என்றும் வினாத்தாள் கூகுள் க்ளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரியர் மாணவர்கள், தாங்கள் பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, அரியர் மாணவர் படித்த கல்லூரி தற்போது மூடப்பட்டிருந்தால், அவர்களுக்கு வேறொரு கல்லூரி பொறுப்புக்கல்லூரியாக ஒதுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Comments