ரஷ்யாவுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் - அமெரிக்க அரசு
உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ரஷ்யாவுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கத்தில் துருப்புகள், டாங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகளை குவித்து வைத்து ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. போர்ப்பதற்றத்தை தணிக்கும் வகையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பலனும் ஏற்படவில்லை என்ற நிலையில் அமெரிக்க அரசு நாட்டு மக்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும் உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கம் எதுவும் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.
அதேசமயத்தில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை விரிவாக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் எனவும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளையொட்டி நிறுத்தப்பட்டுள்ள படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
Comments