அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை

0 4963
அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும்

அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நேரடி தேர்வுகளாக நடைபெறும் எனவும், இளங்கலை மாணவர்களுக்கு 6ஆவது செமஸ்டரும், முதுகலை மாணவர்களுக்கு 4ஆவது செமஸ்டரும், பொறியியல் மாணவர்களுக்கு 8ஆவது செமஸ்டரும் நேரடி தேர்வுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முறைகேடுகளை தவிர்க்க, மாணவர்கள் வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல், கொரியர் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

இதனிடையே, பி.இ., பி.டெக் மாணவர்களுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments